வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் !

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் !

வேடந்தாங்கல் பறவை

நாட்டிலேயே மிகவும் பழமையான பறவைகள் சரணாலயம் மதுராந்தகம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கலில் உள்ளது. இந்த இடம் கடந்த 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் பறவைகளை வேட்டையாடி பொழுதை கழிப்பதற்காக பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த ஊருக்கு வேடர்களின் கிராமம் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னர் கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 1797 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளசு என்பவர் வேடந்தாங்கலை பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து அறிவித்தார். வேடந்தாங்கல்இந்த வேடந்தாங்கல் ஏரி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளதால் இங்கு எவ்வித இடையூறும் இன்றி முட்டை இட்டு குஞ்சு பொரிப்பதற்காக ஏராளமான பறவைகள் வருகின்றன. வேடந்தாங்கல் ஏரியில் உள்ள மரங்களில் கிலுவை, ஊசிவால் வாத்து, நீல ச்சிறகி ,வாத்துகள் தட்டவாயன், பச்சைக்காலி,பவளக்காலி,பட்டாணி உள்ளான்,உண்ணிக் கொக்கு, சிறிய நீர்க்காகம் கூழைக்கடா ,மஞ்சள் மூக்கு நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன் ,குருட்டுக் கொக்கு எனப்படும் மடையான், நத்தை குத்தி நாரை, முக்குளிப்பான், கொண்டை நீர்க்காகம் ஆகிய பறவைகள் வரும்.இங்குள்ள வேடந் தாங்கலுக்கு கனடா ,சைபீரியா வங்காளதேசம், பர்மா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பறவைகள் வருகின்றன அக்டோபர் முதல் மார்ச்வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்கிறது எனவே பறவைகள் சரணாலயத்திற்கு புகழ்பெற்ற வேடந்தாங்கல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது.

Tags

Next Story