இஸ்ரேலுக்கு யாரெல்லாம் ஆதரவு.. இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ஹமாஸ்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தொடுத்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்டுவரும் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்
திடீரென தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் எதிர்பாராமல் நடத்திய ஊடுருவல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் படையினர் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்தியாவின் நிலைப்பாடு
இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் அமைப்பு நடத்தியுள்ள தாக்குதலுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் ஒலிக்கும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், போருக்கு எதிராகவும் இந்தியா குரல் கொடுத்துள்ள நிலையில், தற்போது இஸ்ரேல் நாட்டின் மீது நடைபெற்றுள்ள தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் விவகாரத்தில் அந்த நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவும் தொடர்ந்து பல தசாப்தங்களாக தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சமீப வருடங்களாக இந்தியா-இஸ்ரேல் உறவு நெருக்கமாகி வருகிறது எனவும் இஸ்ரேல் பல பாதுகாப்புத்துறை தொடர்பான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அளித்துள்ளது எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நட்பு வலுவாக உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
G20 மாநாட்டில் ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவதில் வெற்றி பெற்ற நிலையில், இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு யாரெல்லாம் ஆதரவு?
ஹமாஸ் அமைப்பின் தாயகமாக கருதப்படும் ஈரான் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு நிதி உதவி, ஆயுத உதவி, பயிற்சி மற்றும் பிற உதவிகள் அளித்து வருகிறது. இந்நிலையில் ஈரான், கட்டார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. லெபனான் பொதுமக்களும் பெருமளவில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு யாரெல்லாம் ஆதரவு?
அதே சமயத்தில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து ஹமாஸ் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.