பாகிஸ்தானில் சோகம்; இருவேறு விபத்துகளில் 16 பேர் உயிரிழப்பு!!

X
accident
பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் மத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் நடைபெறும் மத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின. இரு இடங்களில் நடந்த சாலை விபத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாகவும், 45 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல், கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இரு விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story