நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் மாயம்!!
niger boat
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கிச் சென்ற அந்த படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இந்நிலையில், மீட்பு பணியின்போது 27 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்றும், மாயமான 100 பேரின் நிலை என்ன என்றும் தெரியவில்லை. மாயமானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விசாரணையில், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என தெரிய வந்தது.