விடிய விடிய தாக்கிய இஸ்ரேல்... காசாவில் 10,000-ஐ கடந்த உயிரிழப்பு...

விடிய விடிய தாக்கிய இஸ்ரேல்... காசாவில் 10,000-ஐ கடந்த உயிரிழப்பு...

இஸ்ரேல் - காசா

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலைத் தொடர்ந்து, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது.

வடக்கு காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை 10,022 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4104 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அல் குத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால், அந்த மருத்துவ சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு…

ஈரான் அதிபர் செய்யது இப்ராகிம் ரெய்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சூழல் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல் குறித்து இருவரும் விவாதித்தனர்.

அப்போது, வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். காசாவில் விரைவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பதற்றத்தைத் தடுத்து, மனிதநேய உதவிகளை தொடர்வது குறித்தும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைந்து மீட்டெடுப்பது குறித்தும் இருவரும் வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story