பாலஸ்தீனர்கள் மீது தீவிரமாக போர் தொடுக்கும் இஸ்ரேல் !!
உலகம் செய்தி
பாலஸ்தீனம் மீதுஇஸ்ரவேல் தொடுத்துள்ள போர் மிகவும் தீவிரமானது என்றும் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது எனவும் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடி இருந்தது ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.
200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது இதில் 35 ஆயிரம் பேருக்கு மேலாக மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
இந்தப் போருக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது காசாவை வரைபடத்தில் இருந்து அழிக்கும் இஸ்ரேலின் நோக்கம் நனவாகி வருகிறது இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்கிறது.
இப்போது ராபா வரை இஸ்ரேல் வந்திருக்கிறது எனவே பாலஸ்தீனர்களைக் காக்க உடனடியாக நடவடிக்கை தேவை என்ற தென்னாப்பிரிக்கா சட்ட பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. நீதிமன்றத்தில் இன்று ஆஜராக இருந்த இஸ்ரேலின் வழக்கறிஞர் கிலாட் நோம் இவர் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நடக்கும் போர் சோகமானது மற்றும் பயங்கரமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இனப்படுகொலையின் என்ற வாதம் ஏற்க முடியாது ஆயுதம் மோதல் என்பது இனப்படுகொலைக்கு நிகரான சொல் கிடையாது என்று கூறியுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டுள்ளது சில நாட்களுக்கு முன் ஐநா பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் இதை ஸ்டில் வான்வழி தாக்குதலை நடத்தியது இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். எனவே போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின இதனால் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட உடனடியாக போரின் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இந்த போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை இதனால் உணவிற்கும் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
நோயாளிகள் கர்ப்பிணிகள் முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகின்றன. தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தோம் அமெரிக்கா பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடு பிடித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன. போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. இதுவரை 900 மேற்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் பாரிஸ் ஐரோப்பா நாடுகளும் பரவத் தொடங்கியுள்ளது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நிதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளன. காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பாலஸ்தீன மக்கள் ராபா நோக்கி தான் நகர்ந்தனர். இந்த பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது.
இங்கு மொத்தம் 10- 15 லட்சம் பாலஸ்தீன மக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை மூன்று லட்சம் பேர் மட்டுமே வெளியேறி உள்ளனர் ஆனால் இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.