இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் !

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் !
X

இஸ்ரேல் - ஈரான் 

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இன்று அல்லது அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஜூலை 31இல் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் தான் காரணம் எனக்கூறி பழிவாங்குவோம் என்று ஈரான் அறிவித்துள்ளது.

இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

சுமார் 1.20 லட்சம் ஏவுகணைகள் உள்ளதாகவும், டி55, டி72 ரக பீரங்கிகள், அதிநவீன ட்ரோன்கள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags

Next Story