துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மகளிர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மகளிர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் நடந்த மகளிர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா

துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் நடந்த மகளிர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா

துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் நடந்த மகளிர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி, பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற பெண்களுக்கு விருது வழங்கும் விழா, வர்த்தகர்கள் சந்திப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார்.

இந்த விழாவில் தலைமை விருந்தினர்களாக அப்துல்லா அல் ஜுப்பலி, மோனா அல் பலூசி, இமான் அல் சுவைதி, சார்ஜா இந்திய சங்க தலைவர் நிசார் தலங்கரா, தொரயா அல் அவாதி, டி.ஆர்.ஐ. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முரளி ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக விஜய், சுஜாதா, பாலா மற்றும் மற்றும் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அமீரகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றுவரும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சுமதி முரளி, ஜெயபாரதி, விவேகா சுந்தர் ஆகியோர் மகளிர் தின விழாவையொட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும் கேக் வெட்டி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

டாக்டர் ஸ்ரீவித்யா சுகுமார் எழுதிய ‘வின்னர்ஸ் எட்ஜ்’ மற்றும் கிருபாஷினி எழுதிய ‘தி அண்டோல்ட் சீக்ரெட் ஆப் சக்கஸ்’ ஆகிய இரண்டு நூல்களும் விழாவில் வெளியிடப்பட்டது. எதிர்கால ஆய்வகத்தின் தலைவர் முரளிகுமார் வழிகாட்டுதலில் ஆய்வக அதிகாரி அர்பித் நுகர் ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக செய்முறை விளக்கம் வழங்கினார். துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சித்திரை பொன் செல்வன் காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், யூரோடெக் நிறுவன அதிகாரி ஊழியர்களின் மதிப்பீடு தொடர்பான விபரத்தை வழங்கினார். மகளிர் மேம்பாடு தொடர்பான குழு விவாதமும் நடந்தது. விழாவில் தமிழக வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கூட்டமைப்பின் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story