விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர்.. மன்னிப்பு ....

விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர்.. மன்னிப்பு ....

அஜித் ரசிகர் மன்னிப்பு

ரீ- ரீலிஸ் ஆன கில்லி திரைப்பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் கைது !!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.

இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டது.

அதே போல், சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

இந்நிலையில், கில்லி பட பேனரைக் கிழித்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது.பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நபர் தற்போது தான் பேனரை கிழித்ததற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலகி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story