தீனா படம் ரீ ரிலீஸ் - அஜித் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு !!!

தீனா படம்  ரீ ரிலீஸ் -  அஜித் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு !!!

தீனா 

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2001 இல் வெளிவந்த படம் தீனா. இப்படத்தில் அஜித் குமார் லைலா சுரேஷ் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்குப் பின்னால் அஜித்திற்கு தலை என்ற பெயர் பிரபலமானது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பின் தீனா படம் டிஜிட்டல் முறையில் இன்று மே ஒன்று அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அஜித் பிறந்தநாள் விழாவை இன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அஜித் நடித்த தீனா ரீ ரிலீஸ் செய்யப்பட்டதை ஒட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தீனா படத்தை பார்ப்பதற்காக தியேட்டர்களில் இன்று காலையில் அஜித் ரசிகர்கள் குவிந்தனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று தீனா படம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது வத்திக்குச்சி பத்திக்காது டா பாடல் ஒலித்த நிலையில் ரசிகர்கள் நடனமாட தொடங்கிவிட்டனர்.

அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறிகள் புகைமூட்டமாக சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் தியேட்டரில் உள்ள படம் ஓடிக் கொண்டிருந்த நிலையில் அஜித் ரசிகர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடி சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story