மாஸ் காட்டும் தளபதி விஜய் களமிறங்கிய கில்லி திரைப்படத்தின் ரி ரிலீஸ் வசூல் வேட்டை !!

மாஸ் காட்டும் தளபதி விஜய் களமிறங்கிய கில்லி திரைப்படத்தின் ரி ரிலீஸ் வசூல் வேட்டை !!

கில்லி

நடிகர் விஜய் திரை வாழ்க்கையில் டாப் 10 திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் முக்கியமாக கில்லி படம் இடம்பெறும்.

தரணி இயக்கத்தில் வித்தியாசாகர் இசையில் வெளிவந்த இப்படத்தை ஏ. எம். ரத்தினம் தயாரித்து இருந்தார். திரிஷா ,பிரகாஷ் ராஜ் ,ஆஷிஷ் வித்யார்த் உள்ளிட்டோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் படத்தில் நடித்திருந்தனர்.

2004 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியை பெற்ற இப்படம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றது இப்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்தனர்.

ரீ ரிலீஸ் கலாச்சாரம் சமீப காலமாக தமிழ் சினிமாவில் அதிக அளவில் வருகின்றது. இதுவரை பல படங்கள் ரிலீஸ் செய்த நிலையில் கில்லி படம் அதிக வரவேற்பு கிடைத்தது.

புது படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு கூட இப்படத்திற்கு கிடைத்தது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் அனைவரும் நடிகர் விஜய் சமீபத்தில் நேரில் சந்தித்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

20 ஆண்டுகள் கழித்தும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ரீ ரிலீஸ் இப்படம் வசூல் குறித்து விவகாரம் வெளியாகி உள்ளது.

அதன்படி உலக அளவில் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் இல் ரூபாய் 24 கோடிக்கு மேல் வசூல் சாதனையை செய்துள்ளது.

இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் இப்படத்தின் வசூல் குறையவில்லை என கூறப்படுகின்றன. கில்லி திரைப்படத்தின் ரீ ரிலீஸ்ன் இறுதி வசூல் சாதனையை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Read MoreRead Less
Next Story