சந்தானம் படத்தின் இன்று வெளியாகும் டிரெய்லர் !!

சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் 2004-ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தின் மூலம் நடிகர் சிம்புவால் பெரிய திரையில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பலப்படங்களில் காமெடியில் கலக்கினார் சந்தானம்.

2012-ஆம் ஆண்டு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2013-ல் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் சந்தானம் ஆனார்.

2014-ம் ஆண்டு ஸ்ரீநாத் இயக்கத்தில் வெளிவந்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இதனையடுத்து பல படங்களில் சந்தனாம் ஹீரோவாக நடித்தார்.

இவர் நடித்த கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து "இங்க நான் தான் கிங்கு" என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படத்தை ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கினார். எழிச்சுர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கோபுரம் பிலிம் புரொடக்ஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் இதில் நடித்து உள்ளனர்.

பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story