காலிஃபிளவர் சில்லி 65 கிரிஸ்பியோ.... கிரிஸ்பி...இப்படி செஞ்சா !

காலிஃபிளவர் சில்லி 65 கிரிஸ்பியோ.... கிரிஸ்பி...இப்படி செஞ்சா !

காலிஃபிளவர் சில்லி 65

சில்லி என்றாலே சிலருக்கு நாவில் எச்சில் சொட்டும் பலருக்கு பசி அதிகமா கூட இருக்கும் .அதுவும் ரோட்டு கடையில் கிடைக்கும் சில்லி என்றால் விரும்பி சாப்பிடும் நபர்கள் அதிகம்.அந்த ரோட்டு கடை காலிஃபிளவர் சில்லியை வீட்டில் எப்படி செய்வதென்று பலருக்கு சிரமமான விசயமும் கூட .மசாலா உதிராமல், சரியான சுவையில் ,கலர்ஃபுல்லா கரெக்டான பக்குவத்தில் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் .

தேவையான பொருட்கள் :

வேக வைப்பதற்கு :

காலிஃப்ளவர் - 1/2 கிலோ

மஞ்சள் - 1/2 டேபிள் ஸ்பூன்

பொறித்தெடுக்க :

எண்ணெய் - தேவைக்கேற்ப

மசாலா தயாரிக்க :

கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்

மைதா மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

சீரகத்தூள் -1 டேபிள் ஸ்பூன்

கொத்துமல்லி தூள் -1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து அதன் இலைகளை நீக்கி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும் .பின் ஒரு பாத்திரத்தில் நீரை சூடேற்றி அந்த நீரில் மஞ்சள் தூள்,காலிஃப்ளவர் துண்டுகளையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவும் .காய் பாதிபதம் வெந்தவுடன் நீரை வடிகட்டிகாலிஃப்ளவரை தனியாக எடுத்துவைத்து கொள்ளவும் .

பின்னர் ஒரு பாத்திரத்தில் சோள மாவு,கடலை மாவு,மைதா மாவு, சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்தூள்,கொத்துமல்லி தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

பின் அதனுடன் வேக வைத்த காலிஃப்ளவரை இந்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து,காலிஃப்ளவரில் மசாலாக்கள் நன்கு இறங்க இதை குறைந்தது 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.

பின் பொறித்தெடுக்க அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த காலிஃப்ளவர் துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.காலிபிளவர் வெந்து பொன்னிறமாக மாறியவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.

இப்போது சுவையான கிரிஷ்பியான காலிபிளவர் சில்லி 65 ரெடி.மாலை நேரத்தில் சூடான ஒரு கப் காபி, டீயுடன் சேர்த்து சாப்பிட சரியான டிஷ் .

குறிப்பு : கலர்புல்லாக வேண்டும் என்றால் கேசரி தூள் சேர்த்து கொள்ளலாம் .

Tags

Read MoreRead Less
Next Story