மணமணக்கும் பூண்டு பொடி செய்வது எப்படி ?

மணமணக்கும் பூண்டு பொடி  செய்வது எப்படி ?

பூண்டு பொடி 

இரத்த கொதிப்பு ,இதயத்தை பாதுகாப்பு ,கொலஸ்ட்ராலை குறைக்க,அலர்ஜிகளை எதிர்க்க, சுவாச பிரச்சனைக்களுக்கான தீர்வு என அத்துணை நன்மை தரும் பூண்டை பொடியாக்கி நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்ள ஒரு நல்ல வழி தான் இந்த பூண்டு பொடி.இந்த ஒரு டிஷ் இருந்தால் இட்லி,தோசை, பூரிக்குக்கு என்ன செய்யலாம் என்ற கவலையே இருக்காது .நம்ம எல்லார் வீட்டிலேயும் கட்டயமா பூண்டு பொடி நிச்சயமா செய்வோம் . அதை சரியான அளவில் ,பதமான பக்குவத்தில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்:

பூண்டு -1 கப்

உளுத்தம் பருப்பு -1 கப்

சிவப்பு மிளகாய் -1 கப்

கருவேப்பிலை- ஒரு கைப்பிடி அளவு

கட்டி பெருங்காயம்-1

தேங்காய் துருவல்- அரை மூடி

குறிப்பு :

வறுத்தெடுக்கும் போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து வறுக்கவும் .

செய்முறை:

முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியில் சிவப்பு மிளகாய், கருவேப்பிலையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் கட்டி பெருங்காயத்தை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது பூண்டை தோல் உறிக்காமல் இடிப்பானால் ஒன்று இரண்டாக இடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .பின் அதே வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் விட்டு பூண்டை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.இறுதியாக துருவிய தேங்காயை அதே வாணலியில் நன்கு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும் .இப்போது வறுத்தெடுத்த பூண்டு ,உளுத்தம் பருப்பு,

சிவப்பு மிளகாய்,கருவேப்பிலை,கட்டி பெருங்காயம்,தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து ஒரு மிக்சி ஜாரில் கொரகொரப்பாக இருக்கும்படி அரைத்து எடுத்தால் அட்டகாசமான பூண்டுபொடி ரெடி .இந்த பொடியுடன் சிறிது நல்லெண்ணெய்,உப்பு சேர்த்து இட்லி தொட்டு சாப்பிட்டால் சுவை நாவில் ஒட்டிக் கொண்டே இருக்கும்.

Tags

Read MoreRead Less
Next Story