குளிக்க போறீங்களா? அப்போ இதை மட்டும் பண்ணாதிங்க - ஹெல்த் டிப்ஸ் !!

குளிக்க போறீங்களா? அப்போ இதை மட்டும் பண்ணாதிங்க - ஹெல்த் டிப்ஸ் !!

ஹெல்த்

பொதுவாக, உணவு சாப்பிட்டதுமே குளிக்க கூடாது என்று சொல்வார்கள். இதற்கு அறிவியல் காரணம் நிறையவே உள்ளது.

நாம் குளிக்கும்போது, நம்முடைய உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சி பெறுகிறது.

மேலும் சருமத்திலுள்ள அழுக்குகளும் வெளியேறுகின்றன. அப்படி அழுக்குகள் வெளியேறும்போது, உடலுக்குள் உள்ள செல்கள் ஆற்றல் பெறுகின்றன.

அதனால்தான், நாம் குளித்ததுமே, பசி உணர்வு தோன்றுகிறது. ஆனால், சாப்பிட்டதுமே நாம் குளித்தால், உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காமல் போய்விடும்.

இதனால் சாப்பிட்டதும் ஜீரணமாகாது. மேலும், மலச்சிக்கல், உள்ளிட்ட வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகளும் வரக்கூடும். அதனால்தான், சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது என்கிறார்கள்.

குளித்துவிட்டு சாப்பிடும்போது, உணவில் உள்ள சத்துக்கள் உடலில் உறிஞ்சப்பட்டு, ஆற்றலாக பெற்றுக்கொள்கிறது.

அதேபோல, எந்த நேரத்தில் குளிப்பது என்ற குழப்பமும் பலருக்கு உண்டு. காலையில் குளிப்பது சிறந்ததா? இரவில் குளிக்கலாமா? என்றெல்லாம் சந்தேகம் உண்டு.

காலையில் குளிப்பதை விட, இரவில் குளிப்பதுதான், அதிக பலன்களை கொண்டிருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதாவது தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது, சருமத்துக்கு மிகவும் நல்லது.

அழுக்கு, வியர்வை போன்ற எதுவுமே சருமத்தில் படியாது. ஆழ்ந்த தூக்கத்தை தரும். உடலில் வெப்பநிலை சீராக இருக்கும். சருமம் சார்ந்த பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம்.

தோல் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.

காலை குளியல் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வையும்,உத்வேகத்தையும் கொடுக்கும் என்றால், இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் குளிப்பது அதற்கு மேல் பலனை தருகிறது.

ஆக மொத்தம், 2 வேளைகளிலும் குளிக்கலாம் என்றாலும், இரவில் குளிப்பது சற்று கூடுதல் பலனை தருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story