கோடையில் சருமத்தை பாதிக்கும் விஷயங்களை செய்யாதீர்கள்!

கோடையில் சருமத்தை பாதிக்கும் விஷயங்களை செய்யாதீர்கள்!

கோடையில் சருமம் 

இந்த கோடையில் சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். கோடை முடியும் வரை சன்ஸ்கிரீன் போடுவது நல்லது. பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்று வந்தாலும் சன்ஸ்கிரீன் போடுவது நல்லது. கோடையில் அதிகம் வியர்வை சுரக்கும் என்பதால் மேக்கப் போடாமல் இருப்பது நல்லது. நமது முகத் துளைகளுக்கு சுவாசிக்க காற்று தேவைப்படுகிறது. கோடையில் அடிக்கடி அதிக மேக்கப் போடுவது முகப்பருக்களை வரவழைக்கும். கோடை காலத்தில் நீரேற்றமாக இருப்பது முக்கியம். எவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவு நல்லது. அதே போல எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் முகம் அதிகம் எண்ணெய் பசை கொண்டது என்றாலும் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டாம். இப்படி செய்வது உங்கள் முகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை நீக்கிவிடும். இரவு தூங்கும் முன்பு முகத்தை நன்கு கழுவுவது முக்கியம். பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுகளை அகற்ற நல்ல பேஸ்வாசை பயன்படுத்துவது நல்லது.

Tags

Read MoreRead Less
Next Story