செல்வமகள் சேமிப்பு திட்டவட்டி 0.2% உயா்வு: மத்திய அரசு உத்தரவு

செல்வமகள் சேமிப்பு திட்டவட்டி 0.2% உயா்வு: மத்திய அரசு உத்தரவு

செல்வமகள் சேமிப்பு

செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை முறையே 0.2 சதவீதம் மற்றும் 0.1 சதவீதம் உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதம் அதிகரித்து 8.2 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 7சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 7.1 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகித மாற்றம் வரும் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து அமல்படுத்தப்படும். மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல், கடனுக்கான வட்டி விகிதத்தை 2.5 முதல் 6.5 சதவீதம் வரை ரிசா்வ் வங்கி அதிகரித்த நிலையில், வைப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களையும் வங்கிகள் உயா்த்தியுள்ளன.

Tags

Read MoreRead Less
Next Story