சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபன் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபன்  குண்டர் சட்டத்தில் கைது

சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபன் குண்டர் சட்டத்தில் கைது

வாணாபுரம் அருகே சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி அடுத்த வாணாபுரம், எம்.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சின்னன், 32; இவர், 13 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது செயலை தடுக்கும் பொருட்டு, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., (பொறுப்பு) தீபக் சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் ஷ்ரவன்குமார், சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சின்னனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் கடலுார் சிறையில் உள்ள சின்னனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story