40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் -கனிமொழி கருணாநிதி

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கனிமொழி கருணாநிதி கூறினார்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை உள்ள வாக்குச்சாவடி மையத்தை தூத்துக்குடி திமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி எம்பி பார்வையிட்டார். அப்போது வாக்கு சதவீதம் குறித்து அவரது முகவர்களிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும் போது இந்தியா கூட்டணி தமிழ்நாட்டினை பொறுத்த வரையில் பாண்டிசேரி உட்பட 40-தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.

இப்போது உள்ள வாக்கு இயந்திர முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை அதனால் வாக்கு சீட்டு முறையை கொண்டுவர வேண்டும். என்ற அவர் மக்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்றார்கள் அதைபோல் நாட்டை காப்பற்ற வேண்டும் என்ற தேர்தலாக நினக்கின்றார்கள் அதனால் வெற்றி நிச்சயம் என கனிமொழி கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story