பெண் அதிகாரியின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

பெண் அதிகாரியின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

பெண் அதிகாரியின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

நாகர்கோவிலில் மனைவி குழந்தைகள் பிரிந்ததால் மனம் உடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (41). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி சூர்யா (39) குமரி மாவட்ட புள்ளியியல் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ரமேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன் மனைவியை அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கடந்த ஆறு மாதம் முன்பு சூர்யா கோபித்துக் கொண்டு கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். ரமேஷ் தனது தாயாருடன் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் தாயார் ரமேஷ்க்கு காப்பி கொடுக்க சென்ற பொழுது அறையில் ரமேஷ் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி குழந்தைகள் பிரிந்ததால் மனம் உடைந்து ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story