கோயம்பேடு மார்கெட்டில் பூண்டு விலை கிடு கிடு உயர்வு

கோயம்பேடு மார்கெட்டில் பூண்டு விலை கிடு கிடு உயர்வு

பைல் படம் 

கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டின் விலை கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி பூண்டு விற்பனைக்கு வருகிறது. கடந்த 10 நாட்களுக்குள் பூண்டின் விலை ஒரு கிலோ ரூ.100 வரை அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு ரூ.160 முதல் ரூ.320 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.200 முதல் ரூ.400வரை விற்பனை ஆகிறது.

Tags

Read MoreRead Less
Next Story