பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி வெயிலின் தாக்கத்தை போக்கிய இஸ்லாமியர்கள் !

பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி வெயிலின் தாக்கத்தை போக்கிய இஸ்லாமியர்கள் !

இஸ்லாமியர்கள்

காரைக்குடியில் வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி வெயிலின் தாக்கத்தை போக்கிய இஸ்லாமியர்கள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் மாசி -பங்குனி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். திருவிழாவின் கடைசி நாளான இன்று முத்தாலம்மன் கோவிலில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக முத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி வரும் நிலையில், பால்குடம் எடுத்து வருபவர்களின் மீது, கல்லுக்கட்டி பஜார் பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமியர்கள் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி வெயிலின் தாக்கத்தை குறைத்தனர். இஸ்லாமியர்களின் சாதி,மத,பேதற்கு அப்பாற்பட்ட இச்செய்கையை மாற்று சமுதாய மக்கள் அனைவரும் பாராட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story