நான் முதல்வன் திட்டம்: நாமக்கல் மாவட்டம் முதலிடம்

நான் முதல்வன் திட்டம்: நாமக்கல் மாவட்டம் முதலிடம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12-ஆம் வகுப்பு மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்ததில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றதை தொடர்ந்து மாநில திட்ட அலுவலகம் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 51% இருந்து 100% ஆக உயர்த்துவதை நோக்கமாக கொண்டு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளின் கூட்டு முயற்சியுடன் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் மாணவர்களிடையே பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள் பற்றிய தீவிர விழிப்புணர்வை உருவாக்கி அவர்கள் தேர்வுகளை மேற்கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும், உயர்கல்வி பயில 7.5% இட ஒதுக்கீடு மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் அனைத்து அரசு பள்ளி மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் உயர்கல்வி வழிகாட்டல் நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் தொடர் முயற்சியால் 2023 -ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சேர்ந்த 3,99,938 மாணவர்களில் 2,41,177 (60%) மாணவர்கள் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்துள்ளனர். ஏப்ரல் 08 2024 அன்று யு எம் ஐ எஸ் தரவுத்தளத்தில் மூலம் இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதின் விளைவாக நாமக்கல் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 10,511 மாணவர்களில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 7,847 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இனிவரும் காலங்களில் 100 சதவிகிதம் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையினர்களை அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 75% மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில ஊக்குவித்து மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட உயர்கல்வி வழிகாட்டல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.புவனேஸ்வரி அவர்களுக்கு மாநில திட்ட அலுவலகம் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Read MoreRead Less
Next Story