பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி - போலீசார் விசாரணை

பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி - போலீசார் விசாரணை

பைக் மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை

மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி ஒருவர் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தீயணைப்பு நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டம், வைகுண்ட சிவராம மங்கலம் பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் சங்கர் (27) பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு சென்று இருந்த சங்கர் நேற்று காலை மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக பைக்கில் புறப்பட்டார். மணவாளக்குறிச்சி - குளச்சல் சாலையில் உள்ள கூட்டுமங்கலம் பள்ளி செல்லும் சாலை அருகே சென்ற போது அவரது முன்னால் பைக்கை ஓட்டி சென்ற கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்த முருகேச பிள்ளை (73) என்பவர் திடீரென இண்டிகேட்டர் போடாமல் வலது புறத்தில் பைக்கை திருப்பி உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராதால் பின்னால் சங்கர் ஓட்டி அந்த பைக் முருகேசபிள்ளையின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் நேற்று காலை முருகேச பிள்ளை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருக்கிறது. இந்த சம்பவம் குறித்து மனவளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முருகேச பிள்ளை மணவாள குறிச்சி ஐஆர் இஎல் மணல் ஆலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Read MoreRead Less
Next Story