அரசு பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தக் கோரி கிராம மக்கள் மனு

அரசு பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தக் கோரி கிராம மக்கள் மனு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 
கே. கல்லுப்பட்டி அருகே அரசு பேருந்தை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தக் கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டத்தின் எல்கை பகுதியான தே.கல்லுப்பட்டி அருகேயுள்ள A.பாறைப்பட்டி, சின்ன சிட்டுலொட்டி, ஆகிய கிராமங்கள் மதுரை - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இங்கிருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணாக்கர்கள், விவசாயிகள், பணிகளுக்கு செல்வோர் ஆகியோர் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்காக பயன்படுத்தும்,

A.பாறைப்பட்டி கிராமத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்லும் நிலை பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பாக மாணவி ஒருவர் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தவில்லை என கூறி குதித்து உயிரிழந்தார். இதனையடுத்து A.பாறைப்பட்டி விலக்கு பகுதி பேருந்து நிறுத்ததிற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது. இந்நிலையிலும் இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தாமல் செல்வதால் மீண்டும் பல ஆண்டுகளாக கிராம மக்கள் நாளுக்குநாள் கடும் அலைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர்.

நாள்தோறும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணாக்கர்கள் நடந்தே செல்லும் நிலை உள்ளதாகவும், அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலையில் குழந்தைகளின் உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருவதாகவும் இது தொடர்பாக அரசிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள எடுக்காத நிலையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர். ஆனாலும் அலுவலர்கள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாத நிலையில் இன்று A.பாறைப்பட்டி கிராம மக்கள் பேருந்துகளை நிறுத்த உத்தரவிட வலியுறுத்தி இன்று 100க்கும் மேற்பட்ட பெண்கள்,

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து A.பாறைப்பட்டி கிராம பட்டதாரி பெண்கள் மற்றும் கிராமத்தினர் செய்தியாளர்களிடம் பேசியபோது ,

மதுரை மாவட்டத்தின் கடைசி ஊர் என்பதால் தே.கல்லுப்பட்டி அருகேயுள்ள ஏ.பாறைப்பட்டி பகுதிக்கு காலை மற்றும் மாலை என இருவேளைகள் மட்டுமே பேருந்துகள் வரும் நிலையில் மற்ற நேரங்களில் பேருந்துகள் நிற்காத நிலையில் பள்ளி கல்லூரிக்கு மாணவ மாணவிகள் செல்ல முடியாத நிலையில் கல்வி இடைநிற்றல் அதிகரிப்பதாகவும், மற்ற எந்த பேருந்துகளும் அங்கு நின்று செல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர் - மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பாக பேருந்து நிற்காத நிலையில் மாணவி ஒருவர் குதித்து உயிரிழந்ததாகவும், மேலும் சில கர்ப்பிணி பெண்களின் குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் பெண்கள் குற்றம்சாட்டினர்.

இந்த தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்ததாகவும், தங்களை யாரும் கண்டுகொள்வில்லை எனவும், பேருந்துகள் வராத நிலையில் ஊரில் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு செல்வதாகவும், யாரும் இங்குள்ள ஆண்களுக்கு பெண் கொடுப்பதில்லை , பெண் எடுப்பதில்லை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இ

னியும் நீடித்தால் தாங்கள் ஆதார் குடும்ப அட்டைகளை அரசிடம் மீண்டும் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனர். பேருந்து நிறுத்தத்திற்கான உத்தரவு இருந்தும் பேருந்துகளை நிறுத்தாமல் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கு சென்று நிறுத்துவதால் எங்களது கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி ஆட்டோவில் அதிகம் செலவு செய்து வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் வேண்டுமென்றே நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதால் நிறுத்தத்திற்கான உத்தரவு ரத்து செய்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருவதால்,

நாள் தோறும் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தனர் பெண் கல்வி முன்னுரிமை மகளிர் இலவச பேருந்து என பல்வேறு திட்டங்கள் பெண் கல்வியை ஊக்கு ஊக்குவிப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில் இது போன்று அடிப்படையான பேருந்து உரிய நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான,

பெண் பட்டதாரிகள் பணிக்குச் செல்ல முடியாமல் கால்நடைகளை மேய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது மேலும் தங்களைப் போன்று தங்களது சந்ததியினரும் பெண்கள் படிக்க முடியாத சூழலை உருவாக்கி வருவதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்

Tags

Read MoreRead Less
Next Story