காரைக்குடியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி

காரைக்குடியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி

சிலம்பம் போட்டி 

காரைக்குடியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியார் மேல்நிலை பள்ளியில் நேதாஜி ஜீவா சிலம்பம் யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ மாணவியருக்கான சிலம்ப போட்டியில் தனித் திறன், ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு சுற்றுதல், கம்பு சண்டை போன்ற நிலைகளில் போட்டிகள் நடந்தன.

சிலம்ப வீரர்களின் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் அதிக அளவில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் பரிசு கோப்பை வழங்கப்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story