பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

 மோர்பாளையத்தில் உள்ள பழமையான பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தன.

மோர்பாளையத்தில் உள்ள பழமையான பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தன.

மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பைரவநாதமூர்த்தி கோவிலில் நேற்று, தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, பகல் 12;30க்கு மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், புஷ்பம், தேன் மற்றும் பல்வேறு அபிசேக மூலிகை திரவியங்களை கொண்டு, அபிசேக ஆராதனை நடந்தது.

திருமணம் ஆகாதா ஆண்களும், பெண்களும் அவர்களின் ஜாதகங்களை மூலவரின் பாதத்தில் வைத்து விரைவில் திருமணமாக வேண்டிக்கொண்டனர். பெண்கள் நீர்பூசணியில் விளக்குஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு, அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story