பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

சின்னசேலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற ஒருவர் கைது.
சின்னசேலம் அடுத்த கூகையூரைச் சேர்ந்தவர் புஷ்பா, 50; இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு எதிர் வீட்டில் 'டிவி' பார்த்துள்ளார். இரவு 10:00 மணியளவில் மர்ம நபர் ஒருவர் புஷ்பா வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றார். உடன் அப்பகுதி மக்கள் அவரை பிடித்து கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல், 46; என தெரிந்தது. புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து குமரவேலை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story