வேளாண்மை திட்ட ஆய்வு கூட்டம்

வேளாண்மை திட்ட ஆய்வு கூட்டம்

வேளாண்மை திட்ட ஆய்வு கூட்டம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தா தேவி தலைமை தாங்கினார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தா தேவி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உழவர் சந்தைகள், குளிர்பதன கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், விவசாயம் சார்ந்த கடன்கள், விவசாய மின் இணைப்புகள், விதைகள் இருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பவர் டிரில்லர் மற்றும் வேளாண் எந்திரங்கள் வழங்குதல், பண்ணைக்குட்டைகள், நில மேம்பாட்டுத் திட்டம், சிறுபாசனத்திட்டம் போன்ற வேளாண்மை உற்பத்தியை மேம்படுத்துவது உள்ளிட்ட வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் கலெக்டர் பிருந்தா தேவி ஆய்வு நடத்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story