சேலம் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

சேலம் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

சேலம் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்.

பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளிலிருந்து வரப்பெற்ற வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணிக்கும் வகையில் வாக்கு எண்ணும் மையத்தின் அனைத்து பகுதிகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று மத்திய தொழில் பாதுகாப்புப் படை, காவல்துறை, ஆயுதப் படை, பட்டாலியன் காவல் படை உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் , காவல் துறையினர் ஆகியோர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான இருப்பு அறையினை வெப் கேமிராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் பிருந்தாதேவி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி உடனிருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story