சென்னையில் 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது

சென்னையில் 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது

வெப்பநிலை

இன்று அதிகப்படியாக ஈரோடு மற்றும் மதுரையில் 37.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. சென்னையில்( மீனம்பாக்கம்) 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், தொடர்ந்து, வரும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தென்னிந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் அதிக வெப்பநிலை இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிகப்படியாக ஈரோடு மற்றும் மதுரையில் 37.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் 34.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் மற்றும் தொண்டி பகுதிகளில் 35.1 செல்சியஸ், வேலூரில் 33 டிகிரி செல்சியஸ் சென்னையில் மீனம்பாக்கம் 32. 8 டிகிரி செல்சியஸ், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 32.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Tags

Next Story