ஐ.பெரியசாமிக்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம் - கலக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்

ஐ.பெரியசாமிக்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம் - கலக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் ஐ.பெரியசாமி

அமைச்சர் ஐ.பெரியசாமி மார்ச் 28ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணை செலுத்த வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

-minister-i-periyasamy.தமிழகத்தின் ஊரக வளர்ச்சி துறை சமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகாரில் பரபர்ப்பு தீர்ப்பை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் ஐ பெரியசாமி, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் 2006-2011ம் ஆண்டு திமுக அமைச்சரவையில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, முறைகேடாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2012ம் ஆண்டு நடந்த அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வலியுறுத்தி ஐ.பெரியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தமிழக எம்பி, எம்.எல்.ஏ.க்களின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முறைகேட்டில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவிடுத்து உத்தரவிட்டது.

பிரச்சனை இதோடு முடிந்து விட்டது என அமைச்சர் பெருமூச்சு விட நிலையில், வழக்கை மீண்டும் மறு விசாரணைக்கு எடுத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடெசன். வழக்கை தாமாக வந்து மறுஆய்வுக்கு எடுத்து விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், இந்த மாதம் இறுதிக்கட்ட விசாரணையை நடத்தினார். கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் ஐ பிரியசாமிக்கு எதிரான விசாரணை நடந்தது. அதில், சுமார் 3 மணி நேரங்கள் ஐ பெரியசாமி தரப்பும், அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கும் வாதங்களை முன் வைத்தனர்.

அப்போது அமைச்சர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்த நிலையில் முறைகேடு புகாரில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ஐ. பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி மார்ச் 28ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணை செலுத்த வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார். குறிப்பிட்ட காலத்தில் சம்பந்தப்பட்டவர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதுமட்டுமில்லாமல் ஐ. பெரியசாமியின் வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. முறைகேடு வழக்கை ஜூலை மாதத்துக்குள் தொடங்க வேண்டும் என்றும், வழக்கை தினமும் விசாரித்து அடுத்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக நீதிமன்றம் கொடுத்துள்ள இந்த தீர்ப்பு திமுகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பலாஜி 8 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து வருகிறது. அண்மையில் அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என தீர்ப்பளித்து 3 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. இப்படி திமுகவில் அடுத்தடுத்த அமைச்சர்கள் மோசடி வழக்குகளில் சிக்கி தண்டனை பெறுவது திமுக மீதான அதிருப்தியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக்கும் இந்த போக்கு நல்லது இல்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story