ராணிப்பேட்டை: கடந்த ஒரு ஆண்டில் 54 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ராணிப்பேட்டை: கடந்த ஒரு ஆண்டில் 54 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ரேஷன் அரிசி 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 54 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை வேலூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு மருத்துவமனை, பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையம், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார் தெரிவிக்கும் வகையில் இலவச தொலைபேசி 1800 599 5950 நம்பர் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"2023 மார்ச் மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சார்பில் 223 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்ப்பட்டு, 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 54½ டன் ரேஷன் அரிசி, 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தமன் மனைவி புவனேஸ்வரி (வயது 46) என்பவர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார், என கூறினர் .

Tags

Read MoreRead Less
Next Story