பான் இந்தியா படமாக தயாராகி வரும் துப்பறிவாளன் பாகம் 2

துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் பான் இந்தியா படமாக விஷால் இயக்கம் மற்றும் நடிப்பில் தயாராகி வருகிறது.
நடிகர் விஷால் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய துப்பறிவாளன் முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை விஷால் நடித்து இயக்குகிறார். விஷால் நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் தென்னிந்திய மொழிகளில் இருந்து நடிகர், நடிகைகள் பலர் இணைகிறார்கள், இத்திரைப்படத்தை விஷால் இயக்குனராக இருந்து இத்திரைப்படத்தின் கதையை பான் இந்திய திரைப்படமாக சிறப்பாக வடிவமைத்து வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story