இலவச நெட்பிளிக்ஸ்!!! எகிறி அடிக்கும் ஏர்டெல்!!!

இலவச நெட்பிளிக்ஸ்!!! எகிறி அடிக்கும் ஏர்டெல்!!!

நெட்பிளிக்ஸ்

தினமும் 3ஜிபி டேட்டாவுடன் 84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ் அணுகலையும் தரும் புதிய ப்ரீபெயட் ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது நெட்பிளிக்ஸில் பாஸ்வேர்டை பகிர்வதில் பல கட்டுப்பாடுகள் வந்துவிட்டதால் சலுகை விலையில் இதுபோல் கிடைக்கும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலையை பார்க்கும் முன் இதில் கிடைக்கும் வேறு பலன்களை முதலில் காணலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள்களாகும். இந்த திட்டத்தில் உங்களுக்கு ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டா கிடைக்கும். 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும், அதுவும் தினமும். இந்த பலன்களுடன் அப்போல்லா 24x7 Circle, இலவச ஹலோ ட்யூன்ஸ், வின்க் மீயூசிக் தளத்தின் அணுகல் ஆகியவை கிடைக்கும். அதுமட்டுமின்றி 5ஜி வரம்பற்ற டேட்டாவும் கிடைப்பதால் நீங்கள் சலிக்காமல் நெட்பிளிக்ஸில் படங்களை பார்த்து தள்ளலாம்.நெட்பிளிக்ஸ் Basic பிளான் சந்தாவின் இலவச அணுகல் 84 நாள்களுக்கு உங்களுக்கு கிடைக்கும். 84 நாள்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டாவுடன் நெட்பிளிக்ஸ் Basic பிளானையும் தரும் இந்த ரீசார்ஜ் பிளானின் விலை ரூ. 1499 ஆகும்.

Tags

Read MoreRead Less
Next Story