பாராசூட் உருவானது எப்படி?

பாராசூட் உருவானது எப்படி?

பாராசூட்

விமானம் தோன்றுவதற்கு முன்பே பாராசூட் தோன்றிவிட்டது. 1495-ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானியான லியனார்டோ டாவின்சி என்பவர். மனிதன் வான வெளியில் உள்ள காற்று மண்டலத்தில் பறக்க முடியும். என்னும் கொள்கையை வகுத்து ஒரு திட்டமும் தந்தார்.

இவர் கொள்கையைப் பின்பற்றி பாராசூட் மூலம் 1595- இல் இத்தாலியைச் சேர்ந்த பாஸ்டோ வெரான்ஸோவியா என்பவர் பறந்து பார்த்தார். உயரமான இடத்திலிருந்து குதித்தார். பாராசூட்டின் உதவியால் மெல்ல இறங்கினார்.

ஆண்ட்ரே கார்னரின் என்னும் பிரெஞ்சுக்காரர் குடை போன்ற அமைப்பில் ஒரு பாராசூட்டை 1797-இல் தயாரித்தார். பலூன்கள் மூலம் வானத்தில் முதலில் பறந்தவரும் இவரே. தம் பலூன் மூலம் 1797-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் வானவெளியில் பறந்தார். பலூனிலிருந்து தம்முடைய பாராசூட் மூலம் வானிலிருந்து குதித்தார்.அவர் மெல்ல மிதந்து இறங்கினார். பாராசூட் மூலம் வான வெளியிலிருந்து முதலில் குதித்தவர் என்னும் பெயரையும் இவர் பெற்றார்.

இதன் வளர்ச்சியாக 1912-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் பெர்ரி என்பவர், முதன் முதலாக ஆகாய விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து முதல் வெற்றியைப் பெற்றார்.

Tags

Read MoreRead Less
Next Story