ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்!

ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்!

ஜியோ

ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளை இலவசமாக வழங்கி வந்தாலும் சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.ஜியோவின் புதிய திட்டத்தில் மிகவும் மலிவான விலையில் இருப்பது ரூ.148 திட்டமாகும். 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் டேட்டா மட்டும் வழங்கப்படுகிறது. 10 ஜிபி 4ஜி டேட்டாவுடன் ஜியோ சினிமா பிரீமியம், சோனி எல்ஐவி, ஜீ5, சன் என்எக்ஸ்டி, டிஸ்கவரி+ மற்றும் 12க்கும் மேற்பட்ட ஓடிடி இயங்குதளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது. ரூ.389க்கு திட்டத்தில் கூடுதல் 5ஜி டேட்டா உடன் அழைப்பு வசதியையும் பெற்று கொள்ள முடியும்.இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது, இது தவிர, 6 ஜிபி கூடுதல் 4ஜி டேட்டாவையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். அடுத்தபடியாக இருக்கும் திட்டத்தின் விலை ரூ.1,198 ஆகும். இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவை அடங்கும். ரூ.4,498 இந்த திட்டத்தில் பயனர்கள் கூடுதலாக 78 ஜிபி 4ஜி டேட்டாவைப் பெற முடியும்.ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், பயனர்கள் இந்த அனைத்து நன்மைகளையும் ஒரு வருடம் முழுவதும் அனுபவித்து கொள்ளலாம்.

Tags

Read MoreRead Less
Next Story