ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட புதிய திட்டம் ? இனி ஐபோனை நாமே பழுது பார்க்கலாம் !!!!

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட புதிய திட்டம் ? இனி ஐபோனை நாமே பழுது பார்க்கலாம் !!!!

ஆப்பிள் நிறுவனம்

ஐபோன் என்றாலே பிரமிப்புடன் பார்த்து மகிழும் சமூகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில், ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக பல சேவைகளையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்கிறது. தற்போது, ஐபோன் பயனர்கள் தங்கள் மொபைலை வீட்டில் இருந்தபடியே சரிசெய்து கொள்ளும் திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் வாயிலாக யூசர்கள் பழுதான ஐபோனை வீட்டில் இருந்தே சரிசெய்து கொள்ளலாம். ஆனால், இது மிகவும் கடுமையானதாக இருக்கும் எனவும், பழுதுபார்க்க தகுதியான டூல்பாக்ஸை நிறுவனமே வழங்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுவாக ஆப்பிள் நிறுவனம், தங்கள் மொபைலைப் பயன்படுத்தும் மக்களிடம், அங்கீகரிக்கப்பட்ட உதிரி பாகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், இந்த திட்டத்தின் வாயிலாக, யூசர்களுக்கு தெரிந்த அல்லது நண்பர்களின் கைவிடப்பட்ட பழைய ஐபோன்களின் உதிரிபாகங்களைக் கொண்டு, தங்களின் போனை சரிசெய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.

பொதுவாக ஆப்பிள் ஐபோனில் பழைய உதிரிபாகங்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத சாதனங்களை நிறுவினால், போனில் முக்கியமாக செயல்படும் ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி வேலை செய்யாது. எந்த சூழலிலும் சரியான உதிரிபாகங்களைப் பயன்படுத்தி மட்டுமே போனை சரி செய்ய வேண்டும் என்று ஆப்பிள் கூறுகிறது. எனினும், இந்த முறை பழைய போன்களின் உதிரிபாகங்களைக் கொண்டுபோனை சரிசெய்யலாம் என்று நிறுவனம் கூறியிருக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story