அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய வேட்பாளர்

அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய வேட்பாளர்

ஆதரவு திரட்டிய போது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி வேட்பாளர் ஜி. வி.கஜேந்திரன் அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஜி.வி.கஜேந்திரன் ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக நிர்வாகிகளான கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், தூசி கே.மோகன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டி வாழ்த்து பெற்றார். அப்போது அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர் .

Tags

Next Story