விரிவுரையாளர், ஜூனியர் மெக்கானிக், ஜூனியர் உதவியாளர், தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், தேவை - கல்லூரியில் வேலை.. தேர்வு கிடையாது ! | கிங் நியூஸ் 24x7

Update: 2025-02-19 10:15 GMT
விரிவுரையாளர், ஜூனியர் மெக்கானிக், ஜூனியர் உதவியாளர், தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், தேவை - கல்லூரியில் வேலை.. தேர்வு கிடையாது ! | கிங் நியூஸ் 24x7

 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி

  • whatsapp icon

தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூனியர் மெக்கானிக், ஜூனியர் உதவியாளர், தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் சுல்லூரியில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 14 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்:

* விரிவுரையாளர்( Lecturer ) - கட்டிடக்கலை உதவியாளர் - 02

* விரிவுரையாளர் - ECE - 01

* விரிவுரையாளர் - ஆங்கிலம் - 01

* விரிவுரையாளர் - இயற்பியல் - 01

* விரிவுரையாளர் - வேதியியல் - 01

* விரிவுரையாளர் - இயந்திரவியல் / முதலாமாண்டு

பொது பொறியியல்  - 01

*இயற்பியல் இயக்குநர்  - உடற்கல்வி - 01

*திறன் உதவியாளர் ( Skilled Assistant )  - கட்டிடக்கலை உதவியாளர் - 01

*திறன் உதவியாளர்  - Architectural Assistant – 01

* ஜூனியர் மெக்கானிக்  - நவீன அலுவலக பயிற்சி - 01

* ஜூனியர் உதவியாளர்  - அலுவலகம் - 02

* தட்டச்சு செய்பவர்  - அலுவலகம் - 01

* அலுவலக உதவியாளர் - அலுவலகம் - 01

கல்வி தகுதி: விரிவுரையாளர் பணியிடத்திற்கு பி.ஆர்க் அல்லது அதற்கு இணையான டிகிரி முடித்து இருக்க வேண்டும். இசிஇ விரிவுரையாளர் பணிக்கு பி இ/ பிடெக்/ பி.எஸ் ஆகிய ஏதேனும் ஒரு பாடைப்பிரிவை முடித்து இருக்க வேன்டும்.

ஆங்கில விரிவுரையாளர் பணிக்கு ஆங்கில பாடப்பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

அதேபோல விரிவுரையராளர் பணிக்கு துறைசார்ந்த பாடப்பிரிவு எடுத்து படித்து இருப்பது அவசியம். இளநிலை உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். டைப்பிஸ்ட் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சியுடன் டைப்பிங் முடித்து இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். கல்வி தகுதி பற்றிய விவரங்களுக்கு தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு?:

* விரிவுரையாளர் - ரூ. 56,100 - 1,77,500 /-

* இயற்பியல் இயக்குநர் - ரூ. 57,700 - 1,82,400 / - * Physical Director - ரூ. 19,500 / -

* ஜூனியர் மெக்கானிக் - ரூ. 19,500 / -

* ஜூனியர் உதவியாளர் - ரூ. 19,500 / -

* தட்டச்சர் - ரூ. 19,500 / -

* அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 / -

தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு அடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:

https://www.periyarpolytech.com/pdf/pdf/Qualification.pdf"

Tags:    

Similar News