அறந்தாங்கி அருகே பரவாக் கோட்டையில் உள்ள பழமையான ஆலமரத்து காளிகாம்பாள் கோயிலில் திருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தின மும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வந்தன. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக் கேற்றி வழிபாடு நடத்தினர். நாளை (23ம் தேதி). முளைப்பாரி எடுத்தலும். 25ம் தேதி காவடி மற்றும் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடக் கிறது. 26ம் தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கருப்பையா சேர்வை வள்ளியம்மை குடும்பத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள், கிராமத்தார் செய்துள்ளனர்.