பெருமாள் பட்டி காலனியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

பெருமாள் பட்டி காலனியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

Update: 2024-08-21 07:26 GMT
பெருமாள் பட்டி காலனியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம், வெள்ளியணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், கரூரை அடுத்த மணவாடி அருகே உள்ள பெருமாள் பட்டி காலனியில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். அந்த கடையில் பொருட்கள் வாங்கும் பயனாளிகளுக்கு தமிழக அரசின் நியாய விலை கடையில் வழங்கும் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், மணவாடி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News