ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஊராட்சி செயலாளர் சங்கத்தினர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஊராட்சி செயலாளர் சங்கத்தினர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஊராட்சி செயலாளர் சங்கத்தினர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சங்கத்தின் மாநில தலைவர் பாலுசாமி தலைமையில் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் ரமேஷ் வெங்கடேஸ்வரன், மாநில மகளிர் அணி இணை செயலாளர் வளர்மதி, கரூர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட சங்கத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது ஒற்றை கோரிக்கையான ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, திடீரென பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.