பேட்டை நரிக்குறவர் காலனியில் ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நெல்லையில் இன்று பெய்து வரும் தொடர் மழையால் இந்த நரிக்குறவ மக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மக்களுக்கு பால் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முகநூல் நண்பர்கள் குழு நிர்வாகிகள் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.