நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம்.
நாமக்கல் சேலம் ரோடு முதலைப்பட்டி பைபாஸ் அருகில் ஆண் சடலம் ஒன்று அதிகாலை அளவில் எரிந்த நிலையில் கிடந்ததை அடுத்து சடலத்தை கைப்பற்றி நல்லிபாளையம் போலீசார் விசாரணை.
சடலத்தை கைப்பற்றி நல்லிபாளையம் போலீசார் விசாரணை. நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் கீழே ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஸ் ஜோஷி, நல்லிபாளையம் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலமாக கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (45). என்பதும், இவர் குடும்பத்தை பிரிந்த நிலையில் சேலத்தில் உள்ள தனது அக்கா சாந்தி வீட்டில் வசித்து வந்ததுள்ளதும் மேலும் லாரி பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. விஸ்வநாதன் தானாகவே தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்து விட்டு வேறு யாராவது எரித்தனரா என நல்லிபாளையம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.