தேனீக்கள்  பராமரிப்பு தொழிலாளி மர்ம சாவு

இரணியல் அருகே

Update: 2024-11-19 11:15 GMT
குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (60).  கூலி தொழிலாளி. இவரது மனைவி கலாராணி. இவர்கள் இரண்டு பேரும் இரணியல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேனீக்கள் பராமரிக்கும் வேலைக்காக நேற்று முன்தினம் வந்துள்ளனர். இரவு சாப்பிட்டு விட்டு அங்குள்ள வீட்டிலே உறங்கியுள்ளனர். இதில் ராஜன் இரவில் மது அருந்திவிட்டு உறங்கியதாக தெரிகிறது.       இந்த நிலையில் நேற்று ( 18-ம் தேதி) காலை ராஜனை எழுப்பும் போது அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதை அடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.       இது குறித்து ராணி இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  ராஜன் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அவர் மாரடைப்பு காரணமாக இயற்கை மரணம் அடைந்தாரா?  அல்லது வேறு ஏதாவது காரணமா?  என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.  பிரேத  பரிசோதனைக்கு பின்தான் ராஜன் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News