பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: உருவப் படத்துக்கு மலர்தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.;

Update: 2024-12-19 14:55 GMT
மேலும், அவர் தனது எக்ஸ் தளத்தில், “கழகத்துக்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர். “தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்" என இனமான வகுப்பெடுத்து - கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News