கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வீரபாண்டியன், அய்யாதுரை, கொளஞ்சி, முருகன், சக்திவேல், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், செந்தில், வீராசாமி, சேகர், ராமச்சந்திரன், ஏழுமலை, மோகன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். இதில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளிக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்த கட்டுமான தொழிலாளிக்கு உடனடியாக பணப்பயன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.