சேகோ தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

கோரிக்கை

Update: 2024-12-28 03:47 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்று கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்தனர். அதில் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும். பயிர்களுக்கான நிவாரண தொகை குறித்தும் தெரிவிக்க வேண்டும். உயர்மின் கோபுரம் அமைக்கப்படும் விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்படுகிறது. வெளி மாவட்ட சேகோ தொழிற்சாலை நிறுவனங்கள் மரவள்ளியை கொள்முதல் செய்யப்படும் நிலையில், அவ்வப்போது விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. எனவே, சேகோ தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News