சக்தி மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளியின் நிறுவனர் பார்வதி அம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரகாஷ் வரவேற்றார்.தாளாளார் ரவிக்குமார் தேசியக்கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளியில், எல்.கே.ஜி., முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு கபடி, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வாலிபால், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.